கும்ப ராசிக்கு ஜாக்பாட் அளிக்கும் சூரியப் பெயர்ச்சி! மேஷம் சிம்மத்துக்கு பிரபல யோகம்

Massi Tamil Month Predictions 2023: இந்த முறை நடைபெறவிருக்கும் கும்ப ராசியில் சூரிய பெயர்ச்சியானது பலவித சிறப்புக்களைக் கொண்டுள்ளது. கும்ப ராசியில் ஏற்கனவே இருக்கும் சனி மற்றும் சுக்கிரனுடன் இணைகிறார் சூரியன் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 13, 2023, 10:24 AM IST
  • கும்பத்துக்கு சூப்பர் சிம்மத்துக்கு எக்சலெண்ட்
  • கும்ப ராசிக்குள் பிரவேசித்த சூரியனின் பெயர்ச்சி
  • மேஷத்திற்கு அருமையான எதிர்காலம்
கும்ப ராசிக்கு ஜாக்பாட் அளிக்கும் சூரியப் பெயர்ச்சி! மேஷம் சிம்மத்துக்கு பிரபல யோகம் title=

Sun Saturn Conjunction: இன்று நடைபெற்ற சூரியப் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்களில் தந்தை என்று அழைக்கப்படும் சூரிய பகவான் இன்று அதாவது, 13 பிப்ரவரி 2023 அன்று காலை 9:21 மணிக்கு கும்ப ராசிக்குள் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் மற்றும் சுக்கிர பகவானுடன் சூரியன் இணைந்தது பலருக்கு யோகத்தைக் கொடுக்கு என்றால், சிலருக்கு பாடங்களை கற்றுக் கொடுக்கும்.  

சூரியன், சுக்கிரன் மற்றும் சனி என மூன்று வலுவான கிரகங்களின் இணைப்பின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும். 2023 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி காலை 6:13 மணி வரை சூரியன் கும்ப ராசியில் இருப்பார். மாசி மாத சூரியப் பெயர்ச்சியினால் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன் என்று தெரிந்துக் கொள்வோம்.

கும்ப ராசியில் சூரியப் பெயர்ச்சி

மேஷம்
இந்த சூரியப் பெயர்ச்சிக் காலத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு சீரும் சிறப்புமாய் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொலைநோக்கு மற்றும் கொள்கை ரீதியான ஆளுமைகளுடன், குறைந்த முயற்சியிலேயே தங்கள் வேலையில் வெற்றி பெற முடியும். எதிரிகளை வெல்வீர்கள். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் உதவியால் இலக்குகளை அடைய முடியும்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு, சூரியனின் இன்றையப் பெயர்ச்சி, அரசாங்க வேலை அல்லது அரசியல் கட்சி தொடர்புடைய வேலைகளைப் பெறுவதற்கு வாய்ப்பமைத்துக் கொடுக்கும். சுயதொழில் செய்பவராக இருந்தால், இந்த காலகட்டத்தில் கூட்டாண்மை மற்றும் பணிகளுக்கு புதிய வாய்ப்புகள் உள்ளன. ரிஷப ராசியினரின் புகழ், அதிகாரம், முன்னேற்றம் மற்றும் மகத்தான வெற்றியைத் தரும் பெயர்ச்சி இது. விருதுகள், அங்கீகாரம் மற்றும் புகழைத்தரும் ஆக்கப்பூர்வமான சூரியப் பெயர்ச்சி இது.

மேலும் படிக்க | மேஷத்தில் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பம்பர் ஜாக்பாட் லாபம்

மிதுனம்
சூரிய சஞ்சாரத்தின் விளைவுகள் உங்களை வலிமையான, வலிமைமிக்க, கம்பீரமான, செல்வந்தராக, மாற்றும். விடாமுயற்சி மற்றும் உறுதியாய் உங்கள் இலக்குகளை சென்றடைவீர்கள். ஆன்மீக ஆர்வம் ஏற்படும்.

கடகம்
சூரியன் உங்களுக்கு பண வரம் தருவார். இந்த சூரியப் பெயர்ச்சியால், பயணங்கள் செல்லும் வாய்ப்பும், அதன் மூலம் ஆழ்ந்த அறிவு, மற்றும் செல்வாக்குப் பெறுவீர்கள்.

சிம்மம்
இந்த சூரியப் பெயர்ச்சி உங்கள் நடத்தை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் கடினமாக்கும். இது காதல் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். அதிகப்படியான ஈகோ மற்றும் கோபத்தால் தங்கள் வாழ்க்கைத் துணையை விட்டுப் பிரியும் நிலையும் ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சிரமம் என்றால், பொதுவாழ்க்கையில் கோலோச்சுவீர்கள். பணியிடத்தில் வெற்றி, புகழ் மற்றும் வணிக கூட்டாண்மை மூலம் மகத்தான செல்வம் கிடைக்கும் வாய்ப்பை சூரிய பகவான் உருவாக்கித்தருவார்.

கன்னி

கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால், அன்றாட வேலைகளில் பிஸியாக இருப்பீர்கள். மேலும், தனிப்பட்ட முறையில் மற்றும் தொழில் ரீதியாக செய்யும் எல்லாவற்றிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். தொடர்ச்சியான முயற்சிகளால், மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | பிப்ரவரி 2023 ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம்; நிதி நெருக்கடி!

துலாம்
இந்த சூரியப்பெயர்ச்சி உங்கள் காதல் வாழ்க்கை, காதல் உறவுகள் முன் உங்களை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தும். விளையாட்டு மற்றும் வேலையில் வழக்கத்தைவிட ஆர்வமாக இருப்பீர்கள்.

விருச்சிகம்
சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போது, விருச்சிக ராசிக்காரர்கள் நிலம், கட்டிடம், வாகனங்கள் என சொத்துக்கள் மூலம் மகிழ்ச்சியடைவார்கள். தாயின் மகிழ்ச்சியையும் ஒத்துழைப்பையும் பெறும் வாய்ப்பும், குடும்பத்தினரும் நண்பர்களும் உங்களை நேசிக்கும் நிலையும் ஏற்படும். சமூக அந்தஸ்து உயரும்.  

தனுசு

மாசி மாத பெயர்ச்சிகளின்படி, மத நடவடிக்கைகளில் ஈடுபாடு தோன்றும். மத நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப திருமணம் தொடர்பான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வீர்கள். உங்கள் வாழ்க்கை இலக்கை அடைய உத்வேகம் மற்றும் ஆற்றல் ஏற்படும். அரசு தொடர்பான தேர்வுகளுக்கு தயாராக இது ஒரு சிறந்த நேரம்.

மகரம்

கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது, உங்கள் குடும்ப கலாச்சாரம் மற்றும் கௌரவம் காரணமாக பெருமைப்படுவீர்கள். உணவு மற்றும் ஆடம்பரத்தில் ஆர்வம் ஏற்படும். அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். கலைஞர்களுக்கு சிறந்த நேரம்.

கும்பம்
இன்றைய சூரியப் பெயர்ச்சி, உங்கள் ஆளுமையை மாற்றி, மிகவும் நேர்மறையாகவும் வித்தியாசமாகவும் உலகத்தின் முன் எடுத்து வைக்கும். உங்கள் நடத்தையில் ஆற்றல் மற்றும் பிரகாசம் இருக்கும், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புத்திசாலித்தனத்தை அளிக்கும் சூரியன், கவர்ச்சிகரமான ஆளுமையாக மாற்றுவார். 

மீனம்

ஆன்மீகப் பற்று ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன, உங்கள் இயல்பில் இரக்கமும் கருணையும் அதிகரிக்கும். மனம் நேர்மறையாகவும் வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையுடனும் சிந்திக்கத் தொடங்கும். சூரியனின் செல்வாக்கு நீங்கள் வாழ்க்கையில் முன்னேறவும் மற்றவர்களின் மரியாதையைப் பெறவும் உதவும்.

மேலும் படிக்க | சனி அஸ்தமனம்: மார்ச் 6 வரை இந்த ராசிகளுக்கு சோதனை காலம், சூதானமா இருங்க!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News