சூரியனின் பெயர்ச்சியால் ஜென்மாஷ்டமியில் இருந்து மகிழப்போகும் 4 ராசிகள்

Sun Transit Effects: ஜென்மாஷ்டமிக்கு முதல் நாள் தனது ராசியை மாற்றும் சூரியனின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம்.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 13, 2022, 07:40 AM IST
  • சூரியப் பெயர்ச்சியால் அவதிப்படப்போகும் ராசிகள்
  • ஜென்மாஷ்டமிக்கு முதல் நாள் சூரியன் பெயர்ச்சியாகிறார்
  • ஆவணி மாதம் 3 ராசிக்காரர்களுக்கு உகந்ததாக இருக்காது
சூரியனின் பெயர்ச்சியால் ஜென்மாஷ்டமியில் இருந்து மகிழப்போகும் 4 ராசிகள் title=

சூரியன் சஞ்சாரம் நடைபெற்று ஆவணி மாதம் துவங்குவது சில ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்களைக் கொடுக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் கணிக்கின்றனர். சூரியைனின் பெயர்ச்சியால் பதவி, கௌரவம் ஆகியவற்றுடன் லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. 2022 ஆம் ஆண்டின் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான நேரத்தைக் கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 17, 2022 அன்று, ஜென்மாஷ்டமிக்கு ஒரு நாள் முன்னதாக, சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, விண்மீன் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளையும் பாதிக்கிறது. இந்த மாற்றம் ஒரு சிறப்பு சந்தர்ப்பத்தில் நிகழும்போது, ​​அதன் விளைவு இன்னும் அதிகமாகும். 4 ராசிக்காரர்களுக்கு ஆவணி மாதம் அனுகூலமானதாக இருக்கும்.  

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆகஸ்ட் 18, 2022 அன்று பாத்ரபத மாத அஷ்டமி அன்று கொண்டாடப்படும், அதற்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 17, 2022 அன்று சூரியன் தனது ராசியை மாற்றி சிம்ம ராசியில் நுழைகிறார். தற்போது கடக ராசியில் இருக்கும் சூரியனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் எதிரொலிக்கும்.

மேலும் படிக்க | சிம்மராசியில் சூரியன் மேஷம் முதல் மிதுனம் வரை பலன்கள்

கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசீர்வாதமும், இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும். சிம்மத்தில் சூரியனின் பிரவேசம் 4 ராசிக்காரர்களுக்கு அந்தஸ்து, செல்வம், கௌரவம் ஆகிய மூன்றையும் தரும். 

மேஷம்: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமிக்கு ஒரு நாள் முன்னதாக, சூரியனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களைக் கொண்டுவரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் மேஷ ராசிக்கு உண்டு. தடைப்பட்ட வேலைகள் தொடங்கும். பண வரத்து சாதகமாக இருக்கும். காதல், திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கடகம்: கடக ராசியில் இருக்கும் சூரியன், அங்கிருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி விலகுகிறார். கடக ராசியில் இருந்து சூரியன் சஞ்சாரம் செய்வதால், கடகத்திற்கு நன்மை உண்டாகும்.

கடக ராசியினருக்கு தொழிலில் பெரிய முன்னேற்றம் அடையலாம். இடமாற்றம், பதவி உயர்வு, புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றம் எதிர்காலத்திற்கு நல்லதாக அமையும். வியாபாரிகளும் ஆதாயம் அடைவார்கள்.

மேலும் படிக்க | அங்காரக யோகம் படுத்தும் பாடு
 
சிம்மம்: சூரியன் சிம்மத்தில் நுழையும் மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்லது. மரியாதை கிடைக்கும். எந்த பிரச்சனையும் தீர்க்க முடியும். பதவி உயர்வு பெறலாம். நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு நடந்து கொண்டிருந்தால் அதற்கு தீர்வு காணப்படும். தொழில் தொடர்பான முக்கிய செய்திகள் வந்து மகிழ்ச்சையை கூட்டும்.
 
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். குறிப்பாக தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள். அவர்களின் வணிகம் நன்றாக நடக்கும், பணம் சம்பாதிப்பார்கள்.  லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | ஆக்ஸ்ட் மாத ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு லாபம், மகிழ்ச்சி அனைத்தும் அதிகரிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News