துலாமில் இணையும் புதன்-சுக்கிரன்; லக்ஷ்மி நாராயண யோகம் பெறும் '3' ராசிகள்!

புதன் கிரகம் அக்டோபர் 26 அன்று, துலாம் ராசிக்கு மாறியுள்ளது. மகிழ்ச்சியையும் ஆடம்பர வாழ்வையும் தரும் சுக்கிரன் ஏற்கனவே துலாமில் உள்ள நிலையில், இரு கிரகங்களும் இணைவதால், லக்ஷ்மி நாராயண யோகம் உண்டாகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 27, 2022, 12:34 PM IST
  • புதன்-சுக்கிரன் இணைவதால் உத்யோகத்தில் விரும்பிய முன்னேற்றம் கிடைக்கும்.
  • கௌரவம் கிடைத்து நிம்மதி அடைவீர்கள்.
  • வருமானமும் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
துலாமில் இணையும் புதன்-சுக்கிரன்; லக்ஷ்மி நாராயண யோகம் பெறும் '3' ராசிகள்! title=

ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி, கிரகங்களின் இணைவு மற்றும் கிரகங்களின் நிலை மாற்றம் ஆகியவை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. கிரகங்களின் இந்த நிலைகளின் அடிப்படையில், கணிப்புகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில், அக்டோபர் 26 ஆம் தேதி, புதன் கிரகம் துலாம் ராசிக்கு மாறியுள்ளது. ஏற்கனவே சுக்கிரன், சூரியன் மற்றும் கேது கிரகங்கள் அங்கே வீற்றிருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் துலாம் ராசியில் புதனும் சுக்கிரனும் இணைந்து லக்ஷ்மி நாராயண யோகத்தை ஏற்படுத்தியிருப்பதால், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் பலன் பெறுவார்கள். மகாவிஷ்ணு மற்றும் லக்ஷ்மி தேவியின் அருளால் பண வரவு பெருகும். இந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.

லக்ஷ்மி நாராயண யோகத்தை அனுபவிக்கும் ராசிகள்:

கன்னி:

புதன் - சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் லக்ஷ்மி - நாராயண யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். பண ஆதாயம் அதிகம் இருக்கும். கடனில் இருந்து விடுபடலாம். வாராது என நினைத்த பணம் திரும்பக் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் சம்பளம் கூடும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வருமான வழிகள் கிடைக்கும்.

தனுசு:

லக்ஷ்மி நாராயண யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். புதன்-சுக்கிரன் இணைவதால் உத்யோகத்தில் விரும்பிய முன்னேற்றம் கிடைக்கும். கௌரவம் கிடைத்து நிம்மதி அடைவீர்கள். வருமானமும் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரம் வளரும். அதிர்ஷ்டம் உங்கள் வாழ்க்கையை வளமாக்கும். வேலையில் வெற்றி உண்டாகும்.

மகரம்:

லக்ஷ்மி நாராயண யோகம் மகர ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். தொழில், வியாபாரத்தில் பெரும் வெற்றி கிடைக்கும். முன்னேற்றமும், பண ஆதாயமும் உண்டாகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். கைக்கு வரவே வராது என நினைத்த பணம் கைக்கு வரும். உங்கள் பணியை பணியில் மூத்தவர்கள், உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். உங்களுக்கு , மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News