இந்த உலகில் பல வகையான பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டது.
அத்தகைய ஒரு பழங்குடி மக்களில் பெண்கள் பின்பற்றும் வித்தியாசமான நடைமுறை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.
தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே குளிக்கும் பெண்கள் உள்ளனர். அதுவும் அவர்களது திருமண நாளில் மட்டுமே.
இந்த பழங்குடியினரின் பெயர் ஹிம்பா, இங்குள்ள பெண்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹிம்பா பழங்குடியினர் ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியாவின் குவானான் மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றனர். தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறை குளித்தாலும் அவர்களை சுத்தமாக வைத்து கொள்கின்றனர்.
இந்த பழங்குடி பெண்கள் சிறப்பு மூலிகைகளைப் பயன்படுத்தி தங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்கின்றனர். இந்த மூலிகைகளை எரித்து அதிலிருந்து வரும் புகையில் குளிக்கின்றனர்.
மூலிகையின் புகையைக் கொண்டு குளிப்பதன் மூலம் தோலில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களையும் அழிக்கும் என்று நம்புகின்றனர்.
இந்த பெண்கள் ஏன் திருமண நாளில் மட்டும் குளிக்கிறார்கள் என்றால், ஹிம்பா பழங்குடியின மக்கள் வசிக்கும் இடத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
பாலைவனத்தின் கடுமையான தட்பவெப்பநிலை அவர்களுக்கு பெரும் தொந்தரவாக உள்ளது. எனவே இங்கு தண்ணீரை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.