இந்திய இரயில்வே ஆனது இந்திய அரசின் இரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி 104,647 கிமீ நீளம் மற்றும் 68,426 கிமீ பாதை நீளம் கொண்டுள்ளது.
இது உலகில் நான்காவது பெரிய தேசிய இரயில் அமைப்பை கொண்டுள்ளது. இதில் 60,451 கிமீ மின்மயமாக்கப்பட்டுள்ளது.
1.2 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளது இந்திய ரயில்வே.
இது உலகின் ஒன்பதாவது பெரிய வேலைவாய்ப்பை வழங்கும் துறையாகும்.
1951-52ல் நிர்வாக நோக்கங்களுக்காக இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே நெட்வொர்க் 6 மண்டலங்களாக மறுசீரமைக்கப்பட்டது. பின்பு படிப்படியாக 18 மண்டலங்களாக பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது 100 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை எப்படி இருக்கும் என்று AI புகைப்படங்களை உருவாக்கி உள்ளது.