Viral Video: புலியின் காதை திருகி சீண்டும் குரங்கு; கடுப்பான புலி!

தற்போது வைரலாகி வரும் குரங்கு சேட்டை தொடர்பான வீடியோ ஒன்றில், குரங்கு ஒன்று புலிகளை பயம் ஏதும் இன்றி சீண்டுவதைக் காணலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 31, 2022, 08:27 PM IST
  • சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் குரங்கு வீடியோ.
  • சிங்கம், புலி அல்லது சிறுத்தை போன்ற விலங்குகளை கண்டாலே அனைத்து விலங்கும் நடுங்கும்.
  • மரத்தடியில் ஓய்வெடுக்கும் புலிகளை சீண்டி குரங்கு கடுப்பேற்றுகிறது.
Viral Video: புலியின் காதை திருகி சீண்டும் குரங்கு; கடுப்பான புலி! title=

சமூக ஊடகங்களில் தினமும் பல வகையான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. கற்பனை செய்யவே முடியாத சில காட்சிகளை இவற்றில் காண்கிறோம். இணையத்தில் வெளியாகும் வீடியோக்களில் விலங்குகளின் சேட்டைகள், குறும்புகள் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீப காலங்களில் இவை பட்டையை கிளப்பி வருகின்றன. நாம் அருகில் நின்று காண முடியாத சில அரிய காட்சிகளை இந்த வீடியோக்களில் காணலாம். தற்போது குரங்கு சேட்டை தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காண்பதற்கு அரிதான ஒரு காட்சி காணக்கிடைக்கிறது. குரங்கு ஒன்று புலியை பயம் ஏதும் இன்றி சீண்டுவதைக் காணலாம். 

சிங்கம், புலி அல்லது சிறுத்தை போன்ற விலங்குகளை கண்டாலே அனைத்து விலங்கும் நடுங்கும். அதன் அருகில் செல்லக் கூட பயப்படும். ஆனால் தற்போது குரங்கு ஒன்று புலியை சீண்டும் வீடியோ வெளியாகியுள்ளது. குரங்கு சேட்டை எனக் கூறுவதை நிரூபிப்பது போல் இந்த வீடியோ உள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், குரங்கு. புலிகளை, காதை திருகியும், வலை பிடித்து இழுத்தும் சீண்டுகிறது. மரத்தடியில் ஓய்வெடுக்கும் புலிகளை சீண்டி கடுப்பேற்றுகிறது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், குரங்கு ஒன்று மரத்தில் தொங்கியபடி கீழே இறங்கி ஓய்வெடுத்து வரும் புலிகளை எப்படி சீண்டுகிறது என்பதை பார்க்கலாம். புலியும் அதனை உறுமியபடி எச்சரித்க்கிறது, ஆனால் அதனை குரங்கு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை

வைரலாகும் குரங்கு சேட்டை வீடியோவை கீழே காணலாம்:

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IFELINES ~ (@feline.unity)

 

குரங்கின் முகத்தில் புலி பயம் இல்லை என்பதை இந்த வீடியோவில் காணலாம். காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோ feline.unity என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். வீடியோ இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அம்மானா சும்மாவா? குட்டியை காக்க சூப்பரா யோசித்த அம்மா குரங்கின் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News