viral video: மணக்கோலத்தில் நடனமாடி அனைவரையும் அசத்தும் கேரள மணப்பெண்

வைரலாகும் திருமண வீடியோக்கள் பல விதம். அதில், கேரளாவில் நடைபெற்ற திருமணத்தில் மணப்பெண் ஆடிய டான்ஸ் சூப்பர் என்று அனைவராலும் பாராட்டப்படுகிறது. பலரும் அந்த வீடியோவை பார்த்து லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 9, 2021, 05:23 PM IST
  • மணக்கோலத்தில் நடனமாடி அனைவரையும் அசத்தும் கேரள மணப்பெண்
  • சிவப்பு வண்ண பட்டுப்புடவையில் அட்டகாச நடனம்
  • கருப்புக் கண்ணாடி அணிந்து சூப்பர் டான்ஸ்
viral video: மணக்கோலத்தில் நடனமாடி அனைவரையும் அசத்தும் கேரள மணப்பெண் title=

வைரலாகும் திருமண வீடியோக்கள் பல விதம். அதில், கேரளாவில் நடைபெற்ற திருமணத்தில் மணப்பெண் ஆடிய டான்ஸ் சூப்பர் என்று அனைவராலும் பாராட்டப்படுகிறது. பலரும் அந்த வீடியோவை பார்த்து லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.

 திருமணத்திற்கான சடங்குகள் சம்பிரதாயங்கள் மட்டுமே தற்போது பழையதாக இருக்கிறது. கொண்டாட்டங்கள் என்பதில் முன்பெல்லாம் நடனம். பாட்டு, கலை நிகழ்ச்சிகள் என அதற்கேன தனி குழுக்கள் இருப்பார்கள். அவர்கள் தான் திருமணத்தில் ஆடுவார்கள், பாடுவார்கள். 

தற்போது மணமக்கள் டான்ஸ் ஆடும் போக்கு அதிகரித்துவிட்டது. இந்த கேரள மணமகள், சிவப்பு வண்ண பட்டுப்புடவை அணிந்து பாரம்பரியமான தோற்றத்தில் இருக்கிறார். ஆனால், அதிலும் அவர் கலக்கலாக ஆடி அசத்துகிறார். திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் கைதட்டி ரசிக்கின்றனர்.

Also Read | ரஜினிகாந்தைப் போல சூப்பர் ஸ்டண்ட் செய்ய முயன்று அடிபட்ட டூப்ளிகெட் ரஜினி

நடுவில் இரு இளைஞர்களும் மணப்பெண்ணுடன் இணைந்து சில விநாடிகள் நடனமாடுகின்றனர். பிறகு அவர்களில் ஒருவரிடம் இருந்து கருப்பு கூலிங்கிளாஸை வாங்கி அணைந்துக் கொள்கிறார் மணப்பெண். பிறகு இளைஞர்கள் இருவரும் மேடையில் இருந்து இறங்க, மணப்பெண்,டான்ஸைத் தொடர்கிறார்.

கோவிட் லாக்டவுன் சமயத்தில் மக்கள் வேடிக்கையான வீடியோக்களை பார்த்து அதில் ஈர்க்கப்பட்டனர். அந்த கால கட்டத்தில் த்ரோபேக் திருமண வீடியோக்களைப் பார்ப்பதும் அதிகமானது. அதேபோல தங்கள் திருமணத்திலும் டான்ஸ் ஆடி அனைவரையும் மகிழ்விக்கின்றனர் மணமக்கள். 

இந்த வீடியோவை டி.ஜி.ஓ திருமண பிலிம்ஸ் யூடியூபில் பதிவேற்றியது.இந்த வீடியோவை இதுவரை நான்கு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோ ஏப்ரல் 7, 2021 அன்று ஆன்லைனில் பகிரப்பட்டது.

இது வேற லெவல் டான்ஸ் என்று பாராட்டப்படுகிறது. மலையாள மணமகள் பிரபல தமிழ் பாடலுக்கு நடனமாடி அசத்தியிருக்கிறார்.

Also Read | Viral: நீச்சல்குளத்திற்குள் ஊர், அப்பார்ட்மெண்ட் கலக்கும் துபாய் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News