அடேய் வழி விடுறா..பெண்ணை வம்பிழுக்கும் குரங்குகள்: வீடியோ வைரல்

Monkey Viral Video: பெண் ஒருவர் மீது ஏறி ​சில குரங்குகள் சீண்டுவதை இந்த வீடியோவில் நாம் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 9, 2023, 01:20 PM IST
  • பெண்ணைப் பார்த்ததும் குரங்குகள் சேட்டை.
  • சிரிப்பை அடக்க முடியாது.
  • இன்றைய வைரல் வீடியோ.
அடேய் வழி விடுறா..பெண்ணை வம்பிழுக்கும் குரங்குகள்: வீடியோ வைரல் title=

குரங்கு மற்றும் பெண்ணின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஒரு ஆச்சரியமான உலகமாக இருக்கிறது. இங்கே நாம் காணும் பல விஷயங்களை நம்மால் நம்ம கூட முடியாது. பொதுவாக நாம் இணையத்தில் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கும, சில சமயம் சிந்திக்க வைக்கும், சில சமயம் ஆச்சரியப்பட வைக்கும, அதேபோல் சில சமயங்களில் அதிர்ச்சியை தரும். அதிலும் இந்த இணைய உலகத்தில் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு இருக்கிறது.

அந்த வகையில் சுவாரஸ்யமான இணைய உலகமான சமூக ஊடகங்களில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் சமூக ஊடக உலகில் தினம் தினம் பகிரப்பட்டு வருகின்றன. அதிலும் குறும்புக்கார குரங்கு வீடியோக்கள் சமீப காலமாக அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. மேலும் இந்த சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. அதேபோல் இந்த வீடியோ நிச்சயம் உங்களை சிரிக்க வைக்கும்.

மேலும் படிக்க | ரயில் செல்லும்போது தண்டவாளத்தில் சிக்கிய நாய்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பும் வீடியோ

குரங்குகளிடம் சிக்கிய பெண்
தற்போது வெளியான வீடியோவைப் பார்க்கும் போது, ​​பெண் ஒருவர் கோவிலுக்குச் செல்வதை நாம் காணலாம். அப்போது கோவில் வளாகத்தின் முன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, ​​குரங்குகள் கூட்டம் அந்த பெண்ணிடம் சிக்கியது. இதைப் பார்த்த பல குரங்குகள் அவளது தோளில் அமர்ந்தன. சில குரங்குகள் அவன் இடுப்பில் ஒட்டிக்கொண்டன. இந்த காட்சிகளை பார்க்கும் போது கட்டாயம் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது.

பெண் மற்றும் குரங்கின் வீடியோவை இங்கே பாருங்கள்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ funtaap என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | சொர்க்கம் பூமியில் வநதுவிட்டதோ? அழகால் அதிசய வைக்கும் நதியின் அதிசய வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News