இந்த குரங்குக்கு குசும்பு கொஞ்சம் ஓவர்தான்... அட்டகாசத்தை வைரல் வீடியோவில் பாருங்கள்

Monkey Viral Video: ஒரு ஸ்டைலான குரங்கின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பார்க்கப்பட்டு வருகின்றது. இந்த வேடிக்கையான வீடியோவை நீங்களும் பாருங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 10, 2023, 06:17 PM IST
  • குரங்கின் ஸ்டைலிஷ் வீடியோவை காணுங்கள்.
  • இன்றைய வைரல் வீடியோ.
  • ஸ்ட்ராவின் உதவியுடன் இளநீர் குடிக்கும் குரங்கு.
இந்த குரங்குக்கு குசும்பு கொஞ்சம் ஓவர்தான்... அட்டகாசத்தை வைரல் வீடியோவில் பாருங்கள் title=

ஸ்டைலிஷ் குரங்கின் வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். சமூக ஊடகங்களில் குரங்குகள் செய்யும் பல அட்டகாசங்களின் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. குரங்குகளின் மனநிலையை கணிப்பது கடினம். ஒரு சமயம் அமைதியாக இருக்கும் இவை அடுத்த கணமே அட்டகாசம் செய்யத் துவங்கிவிடும். அந்த வகையில் இந்த வீடியோ குரங்கின் சேட்டை தொடர்புடையது.

மேலும் படிக்க | டேய்! நீ ஏண்டா இப்படி பொறுப்பில்லாம இருக்க? அதட்டும் யானை அம்மா

இந்த வைரல் வீடியோவில், சமீபத்தில் ஒரு ஸ்டைலான குரங்கின் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவில், படுக்கையில் ஓய்வெடுக்கும் போது குரங்கு ஒன்று மொபைல் விளையாடுவதைக் காண முடிந்தது. சமூக ஊடக பயனர்கள் வீடியோவை மிகவும் விரும்பி வருகின்றது. குரங்கின் நடையையும், ஆட்டையும் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே சமயம் இந்த குரங்குக்கு போட்டியாக மற்றொரு குரங்கும் அங்கு வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த குரங்கின் வீடியோவை பார்த்து மக்கள் மிகவும் ரசித்து வருகின்றனர்.  மனிதர்கள் போலவே இந்த குரங்கும் ஸ்டைலாக உள்ளது. குரங்கின் ஸ்வாக்கைப் பார்த்து, பல விலங்குகள் நிச்சயமாக பொறாமைப்படும் அந்த அளவிற்கு இந்த வீடியோ உள்ளது.

குரங்கின் ஸ்டைலிஷ் வீடியோவை இங்கே காணுங்கள்: 

சமூக ஊடகங்களில் வெளியான இந்த வீடியோவில், ஸ்ட்ராவின் உதவியுடன் குரங்கு ஒன்று இளநீரைக் குடிப்பதைக் காணலாம். குரங்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் இளநீரைக் குடிக்கிறது. இதற்குப் பிறகு குரங்கு கருப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு ஓய்வெடுப்பதை நாம் வீடியோவில் காணலாம்.

இந்த குரங்கு வித்தியாசமானது
இணையவாசிகள் இந்த குரங்கை மிகவும் ரசித்து பார்த்து வருகின்றனர். அதன் நடை, ஸ்வாக் மற்றும் அழகான வெளிப்பாடுகள் அனைவரின் மனதையும் வென்றுள்ளது. மொபைலில் வீடியோ பார்க்கும் குரங்கு போல, குரங்கும் தனித்தன்மை வாய்ந்தது.

இன்றைய வைரல் வீடியோ
இந்த ஸ்டைலிஷ் குரங்கின் வீடியோவை கடந்த ஜூன் 25 ஆம் தேதி அன்று இன்ஸ்டாகிராமில் பேபிஅனிமல்ஸ்வேர்ல்ட் என்கிற கணக்கில் பதிவிட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகி இதுவரை 1.58 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை நெட்டிசன்கள் மிகவும் விரும்பி கமெண்ட் செக்ஷனில் கமெண்ட் அள்ளி வீசி வருகின்றனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | நீ எவ்ளோ கில்லாடியா இருந்தாலும், என்னை பிடிக்க முடியாது மச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News