இணையும் ராகு - புதன்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகமாகும் - வாழ்க்கையே மாறும்

Rahu Mercury Conjunction: மீன ராசியில் ராகு - புதன் கிரகங்கள் இணைய இருப்பதால், இந்த புத்தாண்டில் அந்த மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

வரும் பிப்ரவரி மாதத்தில் மீன ராசியில் ராகு - புதன் கிரகங்கள் இணைய உள்ளன. இது சில ராசிகளின் வாழ்க்கையே மாற்றும்.

1 /8

இன்னும் சில நாள்களில் புத்தாண்டு பிறக்க உள்ளது. ஜோதிடத்தின்படி, இந்த புத்தாண்டில் பல்வேறு கிரகங்கள் பெயர்ச்சி அடைய இருக்கின்றன.

2 /8

குறிப்பாக, ராகு மற்றும் புதன் கிரகங்கள் வரும் புத்தாண்டின் தொடக்க கட்டத்தில் ஒரு ராசியில் இணைய (Rahu Mercury Conjunction 2025) உள்ளன.

3 /8

ராகு பகவான் தற்போது மீன ராசியில் (Pisces) இருக்கிறார். அந்த வகையில், புதன் கிரகமும் வரும் பிப்.27ஆம் தேதி இரவு 11.46 மணிக்கு மீன ராசியில் சஞ்சரிக்கிறது.

4 /8

மீன ராசியில் ராகு - புதன் கிரகங்கள் இணைவதால் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். புத்தாண்டில் அந்த மூன்று ராசிகளுக்கான (3 Zodiac Signs) பலன்களை இங்கு காணலாம்.

5 /8

விருச்சிகம் (Scorpio): வரும் புத்தாண்டு இவர்களுக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். வணிகத்தில் பொருளாதார வளர்ச்சியை அளிக்கும் பல்வேறு வாய்ப்புகள் தேடி வரும். திருமண வாழ்க்கை இன்பமயமாக இருக்கும். 

6 /8

துலாம் (Libra): இந்த ராசிக்காரர்களுக்கு இந்தாண்டு பெரிய பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். பணி வாழ்விலும் புதிய கதவுகள் திறக்கும். தற்போது படித்து முடித்தவர்களுக்கு அவர்களின் கல்வியின் மூலம் சிறப்பான வேலை கிடைக்கும். புத்தாண்டில் வணிக திட்டங்கள் அனைத்தும் வெற்றிபெறும். 

7 /8

ரிஷபம் (Taurus): இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்திலும் முன்னேற்றம் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாகும். புத்தாண்டில் தொழிலிலும் செழிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழிலோ அல்லது புதிய வேலையிலோ இணையும் வாய்ப்புகள் உண்டாகும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் ஜோதிட கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.