தமிழ் ரசிகர்களுக்கு மலையாள நடிகைகள் மீது எப்போதும் ஒரு தீராத காதல் இருக்கும்.
அந்த வகையில் சமீபத்தில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மமிதா பைஜூ.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான பிரேமலு படம் மமிதா பைஜூக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது.
மலையாளத்தில் வெளியான இப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது.
பிரேமலு படத்தின் கதை ஹைதராபாத்தில் நடப்பது போல் இருக்கும் என்பதால் தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் அதிக பிரபலமாகி உள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகை மமிதாவுக்கு தெலுங்கில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் கௌதம் - விஜய் தேவரகொண்டா இணையும் படத்தில் நடிக்க உள்ளார் மமிதா.
விஜய் தேவரகொண்டா இந்த படத்தில் ராணுவ வீரராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.