ஹெச். வினோத் மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களை இயக்கி உள்ளார்.
அடுத்து கமலை வைத்து அவரது 233வது படத்தை இயக்க உள்ளார் ஹெச். வினோத்.
இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங் லொகேஷன்களும் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கமல்ஹாசன் பிஸியான நடிகராக மாறி உள்ளதால் இந்த படம் ஆரம்பிக்க தாமதம் ஆகிறது.
தனுஷ், யோகிபாபுவிடம் கதை சொல்லி உள்ளார். அவர்களும் தற்போது பிசியாக உள்ளனர்.
இதனால் ஹெச். வினோத் தற்போது இந்த இடைவெளியில் மீண்டும் அஜித்திற்கு ஒரு கதை கூறியுள்ளார்.
விடாமுயற்சி படம் முடிந்ததும் மீண்டும் அஜித் - வினோத் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது.
மேலும் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.