அஜித்குமார்-ஷாலினி நட்சத்திர ஜோடி ஏப்ரல் 24,2000 அன்று காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
'அமர்க்களம்’ பட படப்பிடிப்பில் தான் அஜித்-ஷாலினி ஜோடி முதலில் சந்தித்தனர்.
நாளடைவில் இவர்களுக்குள் காதல் மலர்ந்து இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டனர்.
தற்போது அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
இன்று இவர்கள் தங்களுடைய 23-வது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் அஜித்-ஷாலினிக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
டிவிட்டரில் ட்ரெண்டிங் ஹேஷ்டேக்காக இவர்களின் திருமண நாள் மாறியுள்ளது.
பல ஜோடிகளின் விவாகரத்துகளுக்கு மத்தியில் அஜித்-ஷாலினி ஜோடியின் அன்பு தொடர்ந்து வருகிறது.