ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் நடித்து இருந்தார்.
இந்த படத்தின் வெற்றியின் மூலமா ஹிந்தியில் பிஸியான நடிகையாக மாறி உள்ளார்.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருந்த இந்த படத்தில் ரன்பீருக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
அனிமல் படம் கிட்டத்தட்ட 850 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனாலும் அனிமல் படத்தின் மீது அதிக நெகட்டிவ் விமர்சனம் இணையதளங்களில் இருந்து வருகிறது.
ராஷ்மிகா தெலுங்கு படங்களில் நடிக்க 4 கோடி ருபாய் சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.
ராஷ்மிகா தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடிக்க 2.5 கோடி சம்பளம் வாங்கி இருந்தார்.
தற்போது அதிக சம்பளம் கேட்பதால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
பாலிவுட்டில் அதிகம் சம்பளம் கொடுப்பார்கள். அதே போல இங்கு எப்படி தர முடியும் என்று புலம்பி வருகின்றனர்.