சின்ன வயதிலேயே வெள்ளை முடி வருவது ஏன்?
சிறிய வயதிலேயே சிலருக்கு வெள்ளை முடி வந்துவிடுகிறது. இதற்கு நான்கு அடிப்படை காரணங்கள் இருக்கின்றன
ஆரோக்கியமற்ற உணவு - சத்தான உணவுக்குப் பதில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுவதால் கொலஸ்ட்ரால், ரத்த சர்க்கரை அளவு பாதிக்கும்.
இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கு பதிலாக கழிவுகள் உடலில் தேங்க தொடங்கிவிடும். வெள்ளை முடி வருவதற்கு இதுவும் ஒரு காரணம்
ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இரும்பு, கால்சியம், புரதம் நிறைந்த உணவுகளை தினமும் டையட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதிக டென்ஷன் இருந்தால் அவர்களுக்கு வெள்ளை முடி வரும். மன அழுத்ததை எடுத்துக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
சிகரெட் மற்றும் மது அருந்தும்போது நுரையீரல், கல்லீரல் பாதிகப்படுகிறது. இதனால் ரத்த ஓட்டம் பாதிப்படைந்து வெள்ளை முடி வரும்.
உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் வெள்ளை முடி வரும். ஏனென்றால் உடற்பயிற்சி செய்தால் எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.