சனி பகவான் பக்தர்கள் செய்யக்கூடாத விஷயங்கள்
சனீஸ்வர பக்தர்களாக இருந்தும் தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டே இருக்கிறீர்களா?
அப்போது நீங்கள் அவருக்கு பிடிக்காத சில விஷயங்களை செய்து கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்
சனி பகவான் பொறுத்தவரை நீதியின் கடவுள் என்பதால் செய்யும் செயல்களுக்கான எதிர்வினை நிச்சயம் இருக்கும்
பொய் பேசாதீர்கள் - இதனை காப்பாற்ற இன்னொரு பொய் பேச வேண்டியிருக்கும். என்றாவது ஒருநாள் கையும் களவுமாக சிக்குவீர்கள்
தொழிலில் நேர்மை - எந்த தொழில் செய்தாலும் அதிக ஆசைப்பட்டால் பெரும் நஷ்டத்தில் சிக்கிக் கொள்வீர்கள்
கடுஞ்சொல் - எக்காரணத்தைக் கொண்டும் யாரையும் கடுஞ்சொல் கொண்டு திட்டாதீர்கள். இது தேவையில்லாத பகையை உருவாக்கும்
பொறாமை - யார் மீதும் எதற்காகவும் பொறாமைபடாதீர்கள். அது உங்களின் வாழ்க்கைச் சூழலை முற்றிலுமாக சிதைத்துவிடும்
வரவு செலவு - வரவுக்கு ஏற்ற செலவுகளை செய்யாமல் ஆசைகளுக்கு அடிமையானால் வறுமையில் சிக்கிக் கொள்வீர்கள்
கணவன், மனைவி - இருவருமே தங்களுக்குரிய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் மனக்கசப்பு ஏற்படும்
இவற்றையெல்லாம் சனி பகவான் பக்தர்கள் கடைபிடித்தால் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும்