பீட்சா சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படும் உணவு என்பதால் செரிமானத்தை மெதுவாக்குவதோடு வளர்சிதை மாற்றத்தையும் மந்தமாக்கும்.
அதிக கலோரி கொண்ட பீட்சாவில் நிறைய மொஸரெல்லா சீஸ் சேர்க்கப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, வரம்பிற்குள் சாப்பிடுவது பாதுகாப்பானது.
பீட்சாவின் டாப்பிங்ஸாக Pepperoni, Bacon மற்றும் Sausage போன்ற ஹை-ஃபேட் ப்ராசஸ்ட் இறைச்சிகளை சாப்பிடுவது குடல் மற்றும் வயிற்று புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
பீட்சாவில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது, இது சர்க்கரை அளவை அதிகரித்து நீரிழிவு அபாயத்தை உருவாக்கும். சர்க்கரை நோயாளிகள் பீட்சா சாப்பிடவே கூடாது.
பீஸ்ஸாவின் ஒரு துண்டில் சுமார் 400 கலோரிகள் உள்ளன. எனவே ஒரே நேரத்தில் 2 அல்லது 3 பீட்சா ஸ்லைஸ்களை சாப்பிடுவது 800 முதல் 1200 கலோரிகளை அதிகரித்து உடல் எடை உயரக்கூடும்.
பீட்சாவின் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால், அதன் கிளைசெமிக் குறியீடு அதிகளவில் உள்ளது. எனவே, அடிக்கடி பீட்சா சாப்பிடுவது உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பீட்சாவில் நிறைய மொஸரெல்லா சீஸ் சேர்க்கப்படுகிறது . இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அளவோடு சாப்பிடுவது பாதுகாப்பானது.