சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் கல்லீரலில் கொழுப்பை உண்டாக்கும். ஆனால் சில வீட்டு வைத்தியம் மூலம் இதற்கான தீர்வை பெறலாம்.
உடல் பருமன் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை அதிகரிக்கும். உடல் எடையில் 10% குறைப்பதன் மூலம் கல்லீரல் கொழுப்பை குறைக்கலாம்.
உட்கார்ந்த வாழ்க்கை முறை கொழுப்பு கல்லீரலுக்கு முக்கிய காரணம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மற்றும் சுறுசுறுப்பாக இருப்பது கொழுப்பு கல்லீரல் அபாயத்தைக் குறைக்க உதவும்.
மெடிட்டேரியன் டய்ட் கொழுப்பு உருவாவதை குறைக்க உதவும். இந்த உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் நட்ஸ் போன்றவை அடங்கும். மெடிட்டேரியன் டய்ட் இதய நோய் மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்கும்.
இந்த டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
மஞ்சள் உடலில் கிருமிகளை அகற்றி ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. மஞ்சள் சேர்த்துகொள்வதால் கொழுப்புகளை நன்றாக செரிமானம் ஆக உதவி கல்லீரல்களில் கொழுப்பு நிற்காமல் வெளியேற்ற உதவும்.
கல்லீரலில் இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணம் கொழுப்புகள் சரியாக செரிமானம் ஆகாததால் மட்டுமே. பப்பாளி இந்த பிரச்னையை சரிசெய்வதால் உடலில் உள்ல கொழுப்பு கரைகிறது. இதனால் கல்லீரல்களில் கொழுப்புகள் நிற்காது.
நெல்லிக்காய் சாறு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவரலாம். இது கல்லீரல் நச்சு நீக்கி ஆரோக்கியமாக வைக்கவும் செய்யும்.
பட்டை கல்லீரல்களில் என்சைம்களை உற்பத்தி செய்கிறது. மேலும் அழற்சியை குறைக்க செய்கிறது.