ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட் , மக்னீசியம் என சிறுநீரகத்திற்கு ஆரோக்கியத்தை தரும் அனைத்து விஷயங்களும் உள்ளன.
தயிர் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில் அதில் உள்ள ப்ரோபயோடிக் பாக்டீரியா சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.
ஆலிவ் எண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வதாலும் சிறுநீரகத்திற்கு பல வகையான நன்மைகளை அளிக்கும்.
முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க, தினசரி முட்டை உட்கொள்ள வேண்டும்.
இஞ்சி சிறுநீரகத்திற்கு இன்றியமையாதது. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தி நல்ல இரத்தத்தை பாயச் செய்கிறது.
பூண்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். பூண்டு சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதில் உள்ள மாங்கனீசு, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றின் பண்புகள் சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கும்.
கொத்தமல்லி உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால் சிறுநீரகத்திற்கு நல்லது, சிறுநீரகக் கல் பிரச்னை இருந்தாலும் அல்லது எதிர்காலத்தில் வராமல் தடுக்கவும் கொத்தமல்லியை சாப்பிடலாம்.