ஐஸ் கட்டியில் உள்ள சிறந்த பண்புகளில் ஒன்று அழற்சி எதிர்ப்பு ஆகும், இவை முகப்பருவைக் குறைக்க உதவுகிறது.
முகத்தில் தினசரி ஐஸ் கட்டியை தடவினால் சருமத்திற்கு இரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பிரகாசமாக இருக்கும்.
தூக்கமின்மை காரணமாக கண்கள் வீங்கி இருந்தால் ஐஸ் கட்டி வீக்கத்தைக் குறைக்க உதவும்.
கண்களுக்குக் கீழே ஐஸ் கட்டிகளைப் வைத்தால் கருவளையங்கள் நீங்கி நல்ல சருமத்தை கொடுக்கும்.
முகத்தில் சுருக்கங்கள் தெரிந்தால் ஐஸ் கட்டிகளை தவறாமல் தேய்ப்பது இவற்றை குறைக்க உதவும்.
முகத்தில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டால் ஐஸ் கட்டிகள் மூலமா அதனை சரி செய்யலாம். வீக்கம் மற்றும் அசௌகரியத்தை சரி செய்யவும் இது ஒரு சிறந்த வழியாகும்.
ஐஸ் கட்டிகள் இறந்த சரும செல்களை அகற்ற உதுவுகிறது. இதன் மூலம் பொலிவான சருமத்தை பெற முடியும்.
தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஐஸ் கட்டிகளை முகத்தில் தேய்த்தால் கூடுதல் பளபளப்பை கொடுக்கும்.