உடல் எடையை குறைக்க தினசரி நமது பழக்க வழக்கங்களில் சிலவற்றை மாற்றிக் கொண்டால் போதும்.
காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
அவசர அவசரமாக சாப்பிடாமல் மெதுவாக உணவை சாப்பிட வேண்டும்.
அதிக ஊட்டச்சத்துள்ள காலை உணவை எடுத்துக் கொள்வது சிறந்த உடல் எடையை பெற உதவும்.
உடல் எடையை குறைக்க தினசரி போதுமான அளவு தூக்கம் அவசியமான ஒன்று.
சாப்பிடும் போதே தேவையான அளவு சாப்பிடுவது நல்லது. இரவு நேரத்தில் தேவையில்லாதவற்றை சாப்பிட வேண்டாம்
தினசரி காலை அல்லது மாலையில் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது.