எல்லாவற்றையும் எலோரிடமும் சொல்வது அறிவுபூர்மான செயல் அல்ல. சில விஷயங்களை நம் மனதோடு ரகசியமாக வைத்திருப்பது தான் நல்லது.
உங்களுக்கு நெருக்கமாக இல்லாதவர்களிடம், உங்கள் மனதில் இருக்கும் எல்லா விஷயத்தையும் கூறுவது மிகவும் தவறு. சிலவற்றை யாரிடமும் சொல்லக் கூடாது.
மற்றவர்கள் உங்களை நம்பி கூறிய விஷயங்களை, யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால், பிரச்சனை மோசமாகும் வாய்ப்பு உண்டு.
உங்கள் நிதி நிலை குறித்து யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது.
உங்கள் மனதில் நீங்கள் நினைத்திருக்கும் குறிக்கோளை, யாருடனும் பகிர்ந்து கொள்வது சரியல்ல
காதல் உறவில் இருந்தால், அந்த உறவு நிரந்தரமானது என்று உங்களுக்கு தெரியும் வரை, யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது.