உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உடல் பருமன் குறைய மெட்டபாலிஸம் சிறப்பாக இருக்க வேண்டும்.
சீரகம், மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
சீரகத்தை எந்த வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது என்று கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்த சீரகத்தை, இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் என்னை வெறும் வயிற்றில் அருந்தலாம்.
சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து, பொடிசெய்து வைத்துக்கொண்டு அதனை சாலடுகள், சூப்புகள், தயிர் பச்சடி போன்றவற்றில் கலந்து உண்ணலாம்.
சீரகத்தை இரண்டு கப் தண்ணீரில் போட்டு, அது பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து, பின் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.