அழகான மற்றும் பளபளப்பான முடியை பெற முடி அதிகம் சேதமடையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மழையில் நனைந்துவிட்டால் உடனடியாக தலைக்கு குளித்துவிட்டு, முடியை நன்கு துவட்டுங்கள்.
முடிக்கு ஷாம்பு போடுவதற்கு முன் தேங்காய் எண்ணெய் தடவவும். இது தண்ணீரை உறிஞ்சுவதைக் குறைக்கும்.
புரதங்கள், காய்கறிகள், பருப்புகள் மற்றும் கீரைகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் முடி கொட்டும் பிரச்சனை நிற்கும்.
முடி ஈரமாக இருக்கும் போது சீப்பு பயன்படுத்த வேண்டாம். மேலும் அடிக்கடி சீப்புகளை சுத்தம் செய்ய வேண்டும்.
உங்கள் முடிக்கு ஏற்ற ஷாம்பு மற்றும் சீரம் ஆகியவற்றை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.
மழைநீரால் ஏற்படும் சேதத்தை தடுக்க பெண்கள் போனிடெயில் பயன்படுத்தலாம்.
முடி வறட்சியைத் தடுக்க மழைக்காலங்களில் கலரிங் செய்வதை தடுப்பது நல்லது.