நீரிழிவு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
நீரிழிவு நோய் பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கிறது
ஒருவருக்கு ஏன் நீரிழிவு நோய் வருகிறது என்பதற்கான காரணத்தை மருத்துவர்களே கண்டுபிடிக்கவில்லை
ஆனால், நீரிழிவு நோய் வருவதற்கான பல முக்கிய காரணிகளை மருத்துவ உலகம் அடிகோடிட்டு காட்டுகிறது
உடற்பயிற்சி இல்லாமல் இருக்கும்போது இன்சுலின் சுரப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இது நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது
சாப்பிடும் உணவுகள் மற்றும் அதனை சரியான நேரத்துக்கு எடுத்துக் கொள்ளாமை ஆகியவை நீரிழிவு நோய்க்கு காரணமாகின்றன. தேவைக்கு அதிகம் சாப்பிட்டாலும் இந்த பிரச்சனை வரும்
இரவு நேர தூக்கம் மிக அவசியம். இரவில் தூங்கவில்லை என்றால் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு நீரிழிவு நோய் வர காரணமாகிறது
சிலருக்கு காபி, டீ மற்றும் இனிப்புகள் ஆகாது. ஆனால் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் அதிகம் சாப்பிடுவார்கள். இதுவும் ஒரு காரணம்