காதல் தோல்வியில் இருந்து மீள்வது எப்படி?
ஒருவர் பிரேக்அப் நிலையில் இருந்து மீள்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
அப்படியான நாட்களை எதிர்கொள்பவர்களுக்கு உலகமே இருண்டதுபோலவும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாத கையறு நிலையில் இருப்பார்கள்
ஆனால் எதார்தத்தில் பார்க்கும்போது நாட்கள் உங்களைவிட்டு கடந்து சென்று கொண்டே இருக்கும். உங்கள் நினைவுகள் உங்களை அழுத்திக் கொண்டிருக்கும்
உண்மையில், உங்களால் அந்த நினைவுகளுடன் நீண்ட நாட்களுக்கு இருக்க முடியாது. அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
உங்கள் மனம் பிரேக் அப்பைவிட்டு நகர கொஞ்ச டைம் எடுக்கும் என்றாலும், நீண்டநாட்கள் அதற்காக எடுத்துக் கொள்ளக்கூடாது.
நீங்கள் தான் உங்களை பிரேக்அப்பில் இருந்து வெளியே கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அதற்கு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
தொடர்பு வேண்டாம்- உங்களை வேண்டாம் என்றவரை மீண்டும் எந்தவகையிலும் தொடர்பு கொள்ளாதீர்கள். அது உங்களுக்கு மேலும் காயத்தைக் கொடுக்கும்.
அவர்களை பற்றி நினைவூட்டக்கூடிய எந்தவொரு விஷயம், பொருள், நிகழ்வு என்றாலும் முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்து செல்லுங்கள்.
இனி அவருக்காக சிந்தித்த நீங்கள், உங்களுக்காக சிந்தியுங்கள். காயப்படுத்தியவரை நினைத்து உங்களை மேலும் காயப்படுத்திக் கொள்வதில் அர்த்தமில்லை
நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோருடன் உங்களின் நாட்களை முழுமையாக செலவழிக்க கற்றுக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்
உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் மற்ற விஷயங்களில் போதுமான நேரத்தை செலவிடுங்கள். தனிமை நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பயணம் அடிக்கடி மேற்கொள்ளுங்கள்