தங்கம் எப்படி உருவானது தெரியுமா?
தங்கம் குறித்து டாக்டர் கிறிஸ் வொய்சி (Dr. Chris Voisey) ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குவார்ட்ஸில் பைசோ எலக்ட்ரிசிட்டியை உருவாக்குவதன் மூலம் பூகம்பங்கள் தங்கக் கட்டிகளை உருவாக்கத் தூண்டும்
இந்த செயல்பாட்டில் இயந்திர அழுத்தம் (mechanical stress) சில பொருட்களில் Electrical charge-யை தூண்டுகிறது என்று தெரிய வந்துள்ளது.
வடிகட்டிய குவார்ட்ஸ் மின் வேதியியல் முறையில் தங்கத்தை அதன் மேற்பரப்பில் வைப்பதுடன் தங்க நானோ துகள்களையும் (gold nanoparticles) உருவாக்குகிறது.
இந்த செயல்முறை புதியவற்றை உருவாக்குவதை விட ஏற்கனவே உள்ளவற்றில் தங்கத்தை குவிப்பதற்கு வழிவகுக்கிறது.
இதன் மூலம் அதிக தங்கம் டெபாசிட் செய்யப்படுகிறது. மின் இன்சுலேட்டராக இருக்கும் குவார்ட்ஸ் மற்றும் கடத்தியான தங்கம் இந்த செயல்முறைக்கு உகந்த சூழலை உருவாக்குகின்றன.
நிலநடுக்கத்தின் போது குவார்ட்ஸ் அழுத்தத்தை அனுபவிக்கும்போதுஅது Electrical charge-யை உருவாக்குகிறது. இது தங்கத் துகள்களை ஈர்க்கிறது.
ஏற்கனவே உள்ள சேமிப்பகத்தை மேலும் சேர்க்கிறது. காலப்போக்கில் பெரிய தங்கக் கட்டிகள் உருவாக வழிவகுத்தது.
இந்த சமீபத்திய ஆய்வு, தங்கம் தொடர்பான அடுத்தடுத்த ஆய்வுகளுக்கு எதிர்காலத்தில் முக்கியமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.