நீரிழிவு நோயாளிகள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ டிப்ஸ்..!
நீரிழிவு நோயாளிகள் நீண்டநாட்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும்.
அடிப்படையான இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினால் அவர்கள் கூடுதல் பிரச்சனைகள் சந்திக்காமல் ஆரோக்கியமாக இருக்கலாம்
அதனால், நீரிழிவு நோயாளிகள் தினசரி உணவில் தவிர்க்க வேண்டிய உணவுகளை தெரிந்து கொள்ளலாம்
இனிப்பு மிட்டாய்கள் எந்தவகையில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் கட்டாயம் சாப்பிடவே கூடாது.
ஜூஸ் உள்ளிட்ட எந்தபானங்கள் குடித்தாலும் அதில் சர்க்கரை கூடுதலாக சேர்க்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
வெள்ளை அரிசு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் ஆகியவற்றை எல்லாம் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும்
வறுத்த, பொறித்த உணவுகளை சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது அல்ல
பால் பொருட்கள் சாப்பிடுவதில் மருத்துவரின் ஆலோசனை வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளாதீர்கள்.
உணவுக் கட்டுப்பாடு, சிறிய அளவிலான தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் ஆரோக்கியமாக இருக்கலாம்.