கூந்தல் வளர்ச்சி சிறப்பாக இருக்க புரதம் மற்றும் இரும்பு சத்து கொண்ட உணவுகள் அத்தியாவசியம்
இரும்பு சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த பீட்ரூட் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
கேரட்டில் உள்ள விட்டமின் ஏ, கூந்தலுக்கான சீபம் உற்பத்தியை பெருக்கி, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
இரும்பு சத்து நிறைந்த பேரீச்சம் பழம் ரத்த ஓட்டத்தை பெருக்கி, கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த கிரீன் டீ கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சிறந்த பானம்.
விட்டமின்கள், இரும்புச்சத்து நிறைந்த கீரை கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது
விட்டமின்கள், மினரல்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த இளநீர் கூந்தலை வறட்சியில் இருந்து காக்கிறது
உணவைத் தவிர கூந்தல் நன்றாக வளர நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.