காலையில் எழுந்தவுடன் சில நிமிடங்கள் தியானத்திற்கு செலவழித்து மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.
காலையில் எழுந்தவுடன், தண்ணீர் குடிப்பதால், உடலின் நச்சுக்கள் வெளியேறி மனம் புத்துணர்ச்சி பெறும்.
காலை உணவு அன்றைய நாள் முழுவதும் ஆற்றலை அள்ளித்தரும் உணவாக இருக்க வேண்டும்.
தினமும் காலை உடற்பயிற்சிக்கு சிறிது நேரம் ஒதுக்க தவறக் கூடாது.
காலையில் இன்றைய நாளுக்கான பணியை மனதிற்குள் திட்டமிட வேண்டும்.
தினமும் ஏதோ ஒன்றை புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
காலையில் எழுந்தவுடன், டிஜிட்டல் கருவிகளில் இருந்து குறிப்பாக, போனை தொடாமல் விலகி இருக்க வேண்டும்.