நீ நிலவும் இல்லை... நட்சத்திரமும் இல்லை... இவைகளை எல்லாம் அள்ளி... சூடிக்கொள்ளும் வானம் நீ...!!
என்னோடு நீ கூட இருக்கும் நேரம் தான்... என் வாழ்வின் வசந்த காலங்கள்...!!
புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்லை... புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை...!!
நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம்... ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்..!!
நேற்று வரை எதையோ தேடினேன்.. இன்று என்னையே தேடுகிறேன் உனக்காக..!!
தோற்று தான் போகிறது என் கோபங்கள்... உன் அன்பிற்கு முன்னால்...!!
என்னுடைய சிறு இதயத்தில்... உன் மீது பெரிய காதல் இருப்பதற்கு... காரணம் உன் அன்பு..!!
வாழ்க்கை படகில்... நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்... அதுவும், எனக்கு பிடித்த... உன்னுடன் மட்டுமே..!! நன்றி: Kavithai.Blog