ஊறவைத்த பாதாமை சாப்பிட கொடுப்பதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இங்கு விரிவாக காணலாம்
ஊறவைத்த பாதாமில் வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் புரோட்டீன் நிறைந்து காணப்படுகிறது.
ஊறவைத்த பாதாம் உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.
ஊறவைத்த பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இவை எலும்புகளை வலுவானதாக மாற்ற செய்கிறது.
ஊறவைத்த பாதாமில் வைட்டமின் ஈ அதிகளவில் உள்ளதால் இவை உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்த உதவும்.
பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஊறவைத்த பாதாம் எடை இழப்புக்கும் உதவுகிறது. இது தவிர, வைட்டமின் பி7 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை ஊற வைத்த பாதாமில் காணப்படுகின்றன
இது பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறவும். Zee News இதற்கு பொறுப்பேற்காது.