நீங்கள் புத்திசாலி என்பதை காட்டும் 9 குணங்கள்..!
ஒருவரின் புத்திசாலித்தனத்தை அவர்களின் குணாதிசயங்கள் மூலம் எடை போட முடியும்
புத்திசாலிகளிடம் டேட்டா தரவுகள் அப்டேட்டாக இருக்கும். பேசக்கூடிய விஷயத்தில் துல்லியமான பாயிண்டுகளை சரியான இடத்தில் பேசுவார்கள்
அவர்கள் கடந்த காலத்தில் நடந்த விஷயங்களை ஆதாரத்துக்கான தகுந்த நேரத்தில் முன்வைப்பார்கள். அது மறுக்க முடியாத வகையில் இருக்கும்
கடந்த கால நிகழ்வுகளை வைத்தே எதிர்கால முடிவெடுகளையும் எடுப்பார்கள். அதற்கு ஏற்ப எல்லா விஷயங்களையும் திட்டமிடுவார்கள்
புத்திசாலிகளாக இருப்பவர்களிடத்தில் தெளிவு இருக்கும். அதற்காக அவர்கள் டிஜிட்டல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களிடம் இருந்து தள்ளியே இருப்பார்கள்
தெளிவான எண்ணவோட்டத்தில் இருக்கும் நபர்கள் எந்தவொரு விஷயத்தையும் வெறுமனே ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விக்கான விடைகளை அறிய முற்படுவார்கள்.
தன்னுடைய மற்றும் பிறரின் எமோஷன்களை சரியாக அறிந்து வைத்திருப்பார்கள். அதற்கு ஏற்றபடி அவர்களின் அணுகுமுறை இருக்கும்
புத்தசாலிகள் எப்போதும் கம்போர்ட் ஜோனில் இருந்து வெளியே சென்று புதுபுது விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். அதனை நடைமுறைப்படுத்துவார்கள்.
புத்திசாலிகளிடம் எல்லா விஷயங்களையும் பகுத்தறியும் ஆற்றலும், ஒன்றோடொன்று பொருத்திப் பார்க்கும் பக்குவமும் இருக்கும். இதன் மூலம் பிரச்சனைகளை தீர்ப்பார்கள்
சிந்தனையில் தெளிவு, உடலில் ஆரோக்கியம், மனதில் தன்னம்பிக்கை ஆகியவை புத்திசாலிகளிடம் இருக்கும்.