இயற்கையாக கிடைக்கும் சில உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய முடியும்.
மட்டி, இரும்புச்சத்து நிறைந்த உணவு. இதனை தினசரி சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வை சரி செய்யலாம்.
கடல் உணவான சிப்பிகள் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. சிப்பிகளில் துத்தநாகம் நிரம்பியிருப்பதால் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்கிறது.
பூசணி விதை முடி வேர்களை ஊக்கப்படுத்தி முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்கிறது.
நெல்லிக்காய் தலைமுடியை உதிராமல் பார்த்துக்கொள்கிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
வால்நட்ஸ், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளில் இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
சிவப்பு ஒயினில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
கோழி கல்லீரல் லைசின் மற்றும் ஜிங்க் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளது.
மாட்டிறைச்சியில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. இவையும் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்கிறது.