சோகமாக இருப்பவரை உற்சாகப்படுத்துவது எப்படி? 6 அற்புதமான வழிகள்!

How To Cheer Up Someone When They Are Sad : நம்மில் பலர் நம்முடன் இருக்கும் வேளையில் சாேகமாக இருந்தால் மனசே கேட்காது. அவர்களை எப்படி உற்சாகப்படுத்தலாம் தெரியுமா? இதோ 6 வழிகள். 

Written by - Yuvashree | Last Updated : Dec 11, 2024, 04:21 PM IST
  • ஒருவர் சோகமாக இருக்கும் போது அவரை உற்சாகப்படுத்துவது எப்படி?
  • அவரை எளிதில் சிரிக்க வைக்கலாம்!
  • ஈசியான 6 டிப்ஸ்..
சோகமாக இருப்பவரை உற்சாகப்படுத்துவது எப்படி? 6 அற்புதமான வழிகள்! title=

How To Cheer Up Someone When They Are Sad : நம்முடன் இருக்கும் நண்பரோ, காதலிக்கும் நபரோ, குடும்பத்தில் ஒருவரோ மிகவும் சோகமாக இருந்தால் நமக்கு மனதே கேட்காது. அதிலும், வாய் திறந்து ஏன் சோகம் என அவர் சொல்லாவிட்டால் நமக்குள் அது இன்னும் உறுத்திக்கொண்டே இருக்கும். அப்படி, உங்களுக்கு பிடித்த நபர் உங்கள் அருகில் சோகமாக இருக்கிறார் என்றால் அவரை உற்சாகப்படுத்துவது எப்படி? இதோ சில டிப்ஸ்!

பேசுவதை கேளுங்கள்: 

“மனதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளியே சொன்னால் அது இரட்டிப்பாகும், அதுவே சோகத்தை சொன்னால் அது பாதியாக குறையும்” என்று சிலர் சொல்ல கேட்டிருப்போம். இது மிகப்பெரிய உண்மை என்பதையும் கண்கூடாக பார்த்திருப்போம். 

எனவே, நீங்கள் சோகமாக இருக்கும் சமயத்தில் யாரிடமாவது பேசுங்கள், பிறர் சோகமாக இருக்கும் போது அவர் பேசுவதை கூர்ந்து கவனியுங்கள். செல்போனை பார்க்காமல், அவர் பேசும் போது நீங்கள் இடைமறித்து பேசாமல் அவர் பேசுவதை முழு கவனத்துடன் கேட்க வேண்டும். 

ஒருவர் நாம் பேசுவதை கேட்கிறார் என தெரியும் கணத்திலேயே அந்த நபரின் சோகம் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். அதே சமயத்தில் அவர், தனக்கு இதைப்பற்றி பேச விருப்பம் இல்லை என்று கூறிவிட்டால் அவரை தொல்லை செய்ய வேண்டாம். 

ஆறுதல் கூறுதல்: 

ஒருவர் சோகமாக இருக்கும் போது நீங்கள் கண்டிப்பாக சென்று ஆறுதல் கூற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால், அவருக்கு அப்படி ஒன்று தேவைப்படுகிறது என்று கூறினால், வாய்மொழியாகவோ உடல் மொழியாகவோ அதை நீங்கள் வெளிப்படுத்தலாம். 

“பாத்துக்கலாம்..” “இதுவும் கடந்து போகும்” போன்ற வாசகங்கள் படங்களில் மட்டுமல்ல, உண்மை வாழ்க்கையிலும் ஒருவரை நன்றாக உணர வைக்கவல்லது. உடல்மொழியான கட்டிப்பிடித்தல், கையை பற்றிக்கொள்ளுதல் போன்றவற்றாலும் ஒருவருக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை கூறலாம். 

அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வது: 

சோகமாக இருக்கும் ஒருவரை நீங்கள் உற்சாகப்படுத்த நினைத்தால், அவருக்கு பிடித்த விஷயங்களை அவர்களுடன் சேர்ந்து செய்யலாம். அது அவர்களுக்கு பிடித்த படத்தை பார்ப்பதாக இருக்கலாம், அவருக்கு பிடித்த விளையாட்டை விளையாடுவதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதில் அவர்களை உட்படுத்த வேண்டும்.

உணவு: 

உணவு போல ஒரு அருமருந்து உடலுக்கும் கிடையாது மனதிற்கும் கிடையாது. ஒருவர் சோகமாக இருக்கும் போது, அவருக்கு பிடித்த அல்லது வாய்க்கு ருசியான உணவுகளை அவருக்கு வாங்கி கொடுக்கலாம். அவருக்கு பிடித்த இடத்திற்கு அழைத்து சென்று அவர்களை உற்சாகப்படுத்தலாம். அவருடன் அமர்ந்து, சோகத்தை மறக்க நீங்களும் சாப்பிடலாம். 

மேலும் படிக்க | வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் 7 பழக்கங்கள்! சாணக்கியன் சொல்..

பரிசுடன் கடிதம்: 

உங்களுக்கு பிடித்த ஒருவர் சோகமாக இருக்கிறார் என்றால், அவருக்கு உங்களால் முடிந்த, அவருக்கு பிடித்த பொருளை வாங்கிக்கொடுக்கலாம். அது, அவர் சோகமாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமன்றி அவருக்காக, அவருக்கு பிடித்த ஒரு உள்ளம் இங்கு இருக்கிறது என்பதை காண்பிப்பதற்காகவும் இதை செய்யலாம். இந்த பரிசுடன், உங்கள் மனதில் இருந்து எழுதிய குட்டி கடிதத்தையும் இணைக்கலாம்.

நம்பிக்கை: 

சோகமாக இருக்கும் நபரிடம் சென்று “இதெல்லாம் ஒரு விஷயமா? இதுக்கெல்லாமா சோகமா இருப்பாங்க..” என்று மட்டும் கூறி விடாதீர்கள். அவர்கள் மனதில் என்ன போராட்டம் நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது. எனவே, இப்படி அவர்கள் எப்படி உணர வேண்டும் என கூறுவதை விட நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசலாம். 

“இன்று இப்படி இருக்கிறது..ஆனா கொஞ்ச நாள்ல பாரு..இந்த நிலைமை மாறிடும்” என்று கூறிப்பாருங்கள். அவருக்கு மட்டுமல்ல, உங்களுக்குள்ளும் அந்த நம்பிக்கை பெருகும். 

மேலும் படிக்க | குழந்தைகள் எந்த வயது வரை பெற்றோருடன் தூங்கலாம்? இதை தெரிஞ்சிக்கோங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News