SBI, HDFC, ICICI வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி: நிதியமைச்சர் வங்கிகளிடம் சொன்னது என்ன?

நிதியமைச்சரின் ஆலோசனை அமல்படுத்தப்பட்டால் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பயனடைவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 23, 2022, 06:36 PM IST
  • வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் தரத்தில் வங்கிகள் தளர்ச்சி அடையக் கூடாது: நிதியமைச்சர்
  • வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு, வங்கி முறையை எளிமையாக்க வேண்டும்: நிதியமைச்சர்
  • வங்கிகள் அதிகக் கடன் வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்: தருண் பஜாஜ்
SBI, HDFC, ICICI வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி: நிதியமைச்சர் வங்கிகளிடம் சொன்னது என்ன? title=

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை வங்கி அமைப்பு பற்றி ஒரு பெரிய விஷயத்தை தெரிவித்தார். வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு, வங்கி முறையை எளிமையாக்குவது குறித்து அவர் பேசினார். வங்கிகள் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அதிக கவனம் செலுத்தி, அதன் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு செயல்முறை எளிதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

எந்த பிரச்சனையும் இல்லாமல் கடன் வழங்குவதற்கான பரிந்துரை

வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் தரத்தில் வங்கிகள் தளர்ச்சி அடையக் கூடாது என்றும் நிதியமைச்சர் தெளிவுபடுத்தினார். தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சர் இடையேயான சந்திப்பில், வங்கி வணிகத்துடன் தொடர்புடைய ஸ்டார்ட்அப் நிறுவனர் ஒருவர் எந்த பிரச்சனையும் இல்லாமல் கடன் வழங்கும் செயல்முறையை பரிந்துரைத்தார். நிதியமைச்சரின் இந்த ஆலோசனை அமல்படுத்தப்பட்டால் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பயனடைவார்கள்.

இது குறித்து எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா கூறுகையில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் குறிக்கோள் அதிக ஈக்விட்டிய்ல் உள்ளது என்றார். போதுமான சமபங்கு இருந்தால் கடன் தருவதாக அவர் உறுதியளித்தார். பின்னர், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான அரசின் கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளையையும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | SBI வாடிக்கையாளரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி 

வாடிக்கையாளர்களின் தேவையை கவனத்தில் கொள்ள வேண்டும்

வங்கிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர் அவர்களின் நிலைப்பாடு குறித்தும் பேசினார். நிதியமைச்சர் கூறுகையில், 'வங்கிகள் மேலும் மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான முறையில் செயல்பட வேண்டும். ஆனால் அது பாதகமான அபாயங்களை எடுக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது. நீங்கள் அதை எடுக்க தேவையில்லை. ஆனால் வாடிக்கையாளர்களின் வசதியை மனதில் வைத்து அதற்கு ஏற்ற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்’ என்றார். 

வங்கியில் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை அதிகரித்து வருவதாகவும், முழு செயல்முறையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதாகவும் காரா கூறினார். இது அனைத்து செயல்முறைகளையும் எளிதாக்கும். அடுத்த இரண்டு மாதங்களில் வங்கி முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றார் அவர். நம்பகமான பணப்புழக்கத்தைக் கருத்தில் கொண்டு, சிறு வணிகத் துறைகளுக்கான கடன் வளர்ச்சி தனிநபர் கடன் எண்ணிக்கையை எட்டக்கூடும் என தோன்றுகிறது.

நிதிச் சேவைத் துறையில் பணிபுரிந்த வருவாய்த் துறை செயலர் தருண் பஜாஜ், வங்கிகள் அதிகக் கடன் வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். நிறுவனங்களின் நிலையும் தற்போது நல்ல நிலையில் உள்ளன என்றார்.

மேலும் படிக்க | HDFC வங்கியில் கணக்கு இருப்பவர்களுக்கு சூப்பர் செய்தி: மிகப்பெரிய நன்மை கிடைக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News