நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் மழையினால் பெரும் அழிவை கண்டு வருகின்ற
தில்லி, மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், மக்கள் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்
மதுராவில் கனமழை காரணமாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் கோவிலுக்குள் நுழைந்த காட்சி
தெலுங்கானா மாநிலத்தில் அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மாநிலத்தில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டெல்லியில் யமுனை ஆறு கரை புரண்டு ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது. யமுனை நதி அபாயக் குறியைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
இமாச்சலப் பிரதேச மாநிலம் ராம்பூரில் சனிக்கிழமை பெய்த தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை சேதமடைந்தது.
குஜராத்தில் கனமழை; மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து, போக்குவரத்தை பாதிக்கிறது
விடாது பெய்து மக்களை அலைகழிக்கும் மழையால் சாலைகளில் போக்குவரத்து முடங்கி மக்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்
குருகிராமில் பெய்த கனமழைக்கு மத்தியில் டெல்லி-குருகிராம் விரைவு சாலையில் வெள்ளிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சாமோலி மாவட்டத்தில் இடைவிடாத மழை காரணமாக லம்பகாட் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை-7 சனிக்கிழமையன்று அடித்துச் செல்லப்பட்டது