சந்திரயான்-3 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது
லேண்டர் விக்ரம் 40 நாள் பயணத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 23 அன்று மாலை 5.47 மணிக்கு சந்திரனின் மேற்பரப்பைத் தொடும்
ஒட்டுமொத்த தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து சென்ற சந்திராயன் 3
வெற்றிகரமாய் நிலவில் தரையிறங்கினால், அரிய சாதனையை எட்டிய நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்கும்
பூமியிலிருந்து சந்திரனுக்கு விண்கலத்திற்கான பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
லேண்டர், ரோவர் மற்றும் உந்துவிசை தொகுதி ஆகியவற்றைக் கொண்ட இதன் எடை சுமார் 3,900 கிலோ ஆகும்
பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் (ISTRAC) நிலையத்திலிருந்து கண்காணிக்கப்படும்
துல்லியமான சுற்றுப்பாதையில், நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது சந்திராயன்-3 என அது ஏவப்பட்ட சில நிமிடங்களில் இஸ்ரோ ட்வீட் செய்தது