டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்தார்.
ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அதிஷி மர்லினாவை முதல்வராக தேர்வு செய்தனர்.
இதை தொடர்ந்து, அமைச்சராக இருந்த அதிஷி மர்லினா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இவருக்கு 1.41 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது.
2020 சட்டப்பேரவை தேர்தலில் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது.
ஆனால், இவர் பெயரில் சொந்தமாக வீடோ அல்லது நிலமோ இல்லை.
வங்கி கணக்கின் டெபாசிட்களில் மொத்தம் 1.22 கோடி ரூபாய் உள்ளது.