புது டெல்லி: டெல்லி வன்முறை குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டத்திற்கு Congress Working Committee (CWC) கட்சியின் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிற மூத்த தலைவர்களும் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்குகிறார். இருப்பினும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது வெளிநாட்டில் இருப்பதால், அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அக்பர் சாலையில் உள்ள கட்சியின் தலைமையகத்திலிருந்து இருந்து பாராளுமன்ற மாளிகைக்கு வரை அமைதி பேரணியை நடத்துவார்கள்.
செவ்வாயன்று, டெல்லி வன்முறையை கண்டித்து, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை அரசியல் நோக்கத்தை கைவிட்டு, முன்வந்து டெல்லி மாநிலத்தில் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
இது காந்தி, நேரு மற்றும் படேலின் இந்தியா. இந்த வன்முறையை எந்த இந்தியனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மத ஒற்றுமையை நிலைநாட்டவும், மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளின் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்கவும் டெல்லி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது" என்று காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
சமூகத்தில் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு காங்கிரஸ் கட்சி மத்திய அரசு மற்றும் டெல்லி அரசாங்கத்துடன் எல்லா வகையிலும் நிற்கும் என்று சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
நீங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக இந்த நாட்டை பிளவுப்படுத்தாதீர்கள். டெல்லி மற்றும் நாட்டு மக்கள் சார்பில் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு ஒரு உண்மையான வேண்டுகோள். காந்தி ஜி இந்தியாவில் வன்முறைக்கு இடமில்லை... நமது நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் சகோதரத்துவத்தை பேணவும் வேண்டிய அவசியம் உள்ளது" என்றார்.
டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.