பகீர் தகவல்! பெட்ரோல் விலை ₹125 வரை அதிகரிக்கும்: வல்லுநர்கள்

அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக, உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் கச்சா எண்ணெய் விலை $100 வரை அதிகரிக்கும் நிலை உள்ளதாக கருதுகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 25, 2021, 09:04 AM IST
  • தற்போது, ​​நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் கச்சா எண்ணெய் விலை $100 வரை அதிகரிக்கும் நிலை உள்ளதாக கருதுகின்றனர்.
  • இப்போது அனைவரின் கவனமும் ஜூலை 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஒபெக் + நாடுகளின் கூட்டத்தில் உள்ளன.
பகீர் தகவல்! பெட்ரோல் விலை ₹125 வரை அதிகரிக்கும்: வல்லுநர்கள்  title=

Petrol Prices Latest Update: அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சாமானிய மக்களை பாதித்துள்ளன என்பதை மறுக்க இயலாது. தற்போது, ​​நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கு நிலவுகிறது. 

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 98.88 ரூபாய் என்ற அளவிலும், டீசல் விலை லிட்டருக்கு 92.89 ரூபாய் என விலையிலும் விற்கப்படுகிறது. இந்நிலையில், அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக, உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள், கச்சா எண்ணெய் விலை $100 வரை அதிகரிக்கும் என கருதுகின்றனர். 

OPEC+ நாடுகளின் கூட்டத்தின் மீது உலக கவனம்

கச்சா கடந்த ஒரு வருடத்தில் பீப்பாய் விலை $ 26 வரை உயர்ந்தது. 2020 ஜூன் மாதம், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 40 டாலர் என்ற விலையில் இருந்தது, இன்று  கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 76 டாலருக்கும் அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை  நிலவுக்கிறது. இப்போது அனைவரின் கவனமும் ஜூலை 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஒபெக் + நாடுகளின் கூட்டத்தில் உள்ளன. மேலும்,உற்பத்தி கொள்கை தொடர்பான முடிவு ஆகஸ்டில் எடுக்கப்பட உள்ளது. கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதில் ரஷ்யா ஆதரவாக உள்ளது.

ALSO READ | Petrol diesel Price: இன்றைய (ஜூன் 24) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

 

பெட்ரோல் விலை ரூ .125 ஐ எட்டும்

இப்போது ஒபெக் + நாடுகள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க முடிவு செய்தால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படுமா என்பது  குறித்து எண்ணெய் நிபுணர் அரவிந்த் மிஸ்ரா கூறுகையில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவதற்கு முன்னரே, எண்ணெய் கொள்முதலில், வருவாய் ஏதும் இல்லாத நிலை தான் உள்ளது. கச்சா எண்ணெய் விலைகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  பெட்ரோல் விலை 125 ரூபாய் வரை செல்ல வாய்ப்பு உண்டு. குறைவதற்கான அறிகுறி ஏதும் இல்லை என தெரிவித்தார். 

கச்சா எண்ணெய் $ 100 வரை செல்லலாம்

கச்சா எண்ணெய் விலை உயர்வு ஜூன் முதல் தொடங்கியது, இதன் விலை 76 டாலரை எட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் கச்சா விலை பீப்பாய்க்கு $ 100 ஐ எட்டும் என்று பாங்க் ஆப் அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது. மற்றொரு  பெட்ரோல் ஏஜென்சியான கோல்ட்மேன் சாச்ஸ், கச்சா எண்ணெய் விலை  இந்த ஆண்டின் இறுதியில், ஒரு பீப்பாய் 80 டாலர்  என்ற அளவை எட்டலாம் என்கிறது. 

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மீது உலக கவனம்

ஈரான் மீதான அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் கச்சா எண்ணெயும் அதிகரித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால், அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை தளர்த்தக் கூடும். ஈரான் எண்ணெய் விநியோகத்தை அதிகரித்தால், விலை சிறிது குறையலாம்.  ஆனால் இது குறித்து இரு நாடுகளின் அறிக்கைகளும்  வேறாக உள்ளன. எனவே, எண்ணெய் சப்ளை உடனடியாக அதிகரிக்குமா என்பது இன்னும் சந்தேகத்திற்கு இடமான நிலையில் தான் உள்ளது.

ALSO READ | பெட்ரோல், டீசல் விலை; தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலம்: அன்புமணி இராமதாஸ் அறிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News