விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது-பிரிட்டன்

Last Updated : May 11, 2016, 12:47 PM IST
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது-பிரிட்டன்  title=

ரூ.9000 கோடி வங்கிகளில் கடன் வாங்கி கொண்டு திருப்பிச் செலுத்தாத இந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் மறுப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து வெளியுறவுத்துறை கூறியது விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. 
விஜய் மல்லையாவை ஒப்படைப்பதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும், மேலும் பிரிட்டனின் 1971–ம் ஆண்டு சட்டப்படி  பிரிட்டனில் இருக்கும் ஒருவர் செல்லுபடியாகத்தக்க பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என அவசியமில்லை என கூறியுள்ளது.

மேலும் இந்தியாவுக்கு சட்ட ரீதியிலான ஒத்துழைப்பு வழங்க பிரிட்டன் ரெடியாக இருக்கிறது. இதைக்குறித்து இரண்டு நாடும் சேர்ந்து பேசி வருவதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

Trending News