பாஜக மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொரோனா அறிகுறி...!

தொற்று உறுதியானதை அடுத்து ஜோதிராதித்யா சிந்தியா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி...!

Last Updated : Jun 9, 2020, 06:02 PM IST
பாஜக மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொரோனா அறிகுறி...! title=

தொற்று உறுதியானதை அடுத்து ஜோதிராதித்யா சிந்தியா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி...!

காங்கிரஸிலிருந்து சமீபத்தில் விலகி பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரின் தாய் மாதவி ராஜே சிந்தியா இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோதிராதித்ய சிந்தியா, அவரின் தாய் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவி்ப்பதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளன. இருவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, கடந்த நாட்களுக்கு முன் டெல்லியில் உள்ள சாகேத் பகுதியிலிருந்தும் மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு அறிகுறிகள் இருந்ததாகவும், அவரின் தாய்க்கு அறிகுறிகள் இல்லாமல் இருந்ததாகவும் இந்தியாடுடே தெரிவித்துள்ளது. இப்போது இருவரும் அந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் "நீங்களும் (ஜோதிர்ஆதித்யா) உங்கள் தாயாரும் உடல்நலக்குறைவில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். விரைவில் நீங்களும், உங்கள் தாயாரும் குணமடைந்து திரும்ப இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திக்விஜயன் சிங்கின் மகனுமான ஜெய்வர்தன் சிங்கும் ட்விட்டரில் ஜோதிர்தியா சி்ந்தியா, அவரின் தாய் விரைந்து குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளார். முன்னதாக பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ராவும் கொரோனா அறிகுறிகளுடன் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.

READ | உங்கள் வீட்டில் பசு உள்ளதா..... மாதம் ₹.70,000 வரை சம்பாதிக்க ஒரு அறிய வாய்ப்பு... 

இதற்கிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தொண்டை அழற்சி இருந்ததால், அவர் நேற்று தனிமைப்படுத்திக்கொண்டார். அவருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, இன்னும் கேஜ்ரிவாலின் முடிவுகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News