வினாத்தாள் பிழை: 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

CBSE 10-ஆம் வகுப்பு கேள்விதாளில் அச்சுப்பிழை ஏற்பட்டதன் காரணமாக மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களை கூடுதலாக வழங்க CBSE முடிவுசெய்துள்ளது!

Last Updated : Apr 20, 2018, 09:20 AM IST
வினாத்தாள் பிழை: 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! title=

CBSE 10-ஆம் வகுப்பு கேள்விதாளில் அச்சுப்பிழை ஏற்பட்டதன் காரணமாக மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களை கூடுதலாக வழங்க CBSE முடிவுசெய்துள்ளது!

கடந்த மார்ச் 12-ஆம் நாள் 10-ஆம் வகுப்பு CBSE ஆங்கில பாடத்திற்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் இடம்பெற்ற வாக்கியத்தில் பிழை இருப்பதாக மாணவர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை முன்வைத்து வந்தனர். 

இதனை பரிசீலனை செய்த CBSE, இந்த பிழைக்கு இழப்பீடாக மாணவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து CBSE அதிகாரிகள் தெரிவிக்கையில், "பிழையானது CBSE நிர்வாகத்தால் ஏற்பட்டுள்ளது, நிர்வாகத்தின் பிழைக்கு மாணவர்கள் பாதிப்பது நியாயம் அற்றது எனவே இந்த பிழைக்கு ஈடுசெய்யும் விதமாக மாணவர்களுக்கு கூடுதலா 2 மிதப்பெண்கள் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக CBSE தேர்வில் வினாத்தாள்கள் வெளியானதாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இப்பிரச்சணை காரணமாக 12 ஆம் வகுப்பு பொருளாதார தேர்விற்கான மறுத்தேர்வு வரும் ஏப்ரல் 25-ஆம் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Trending News