Biological-E தயாரிக்கும் 90% செயல்திறன் கொண்ட Corbevax விரைவில்..!!

தற்போது பயன்பாட்டில் உள்ள மூன்று தடுப்பூசிகளை தவிர விரைவில் பயன்பாட்டிற்கு வரும் மற்ற தடுப்பூசிகளில் ஒன்று தான் கோர்பேவாக்ஸ் (Corbevax) ஆகும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 18, 2021, 06:44 AM IST
  • Corbevax கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் முக்கிய மைல்கல்லாக இது இருக்கும்.
  • கோர்பேவாக்ஸ் வைரஸின், SARS-CoV-2 என்னும் வைரஸின் ஒரு குறிப்பிட்ட பகுதியான ஸ்பைக் புரதத்தினால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியாகும்.
  • நோவாவாக்ஸ் (Novovax) என்னும் ஒரு புரத அடிப்படையிலான தடுப்பூசியையும் தயாரிக்கப்பட்டுள்ளது.
Biological-E தயாரிக்கும் 90% செயல்திறன் கொண்ட Corbevax விரைவில்..!!  title=

இந்தியாவில் கொரோனாவிற்க்கு எதிரான போராட்டத்தில் மேட் இன் இந்தியா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்ட்  மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் தற்போது,  பயன்பாட்டில் உள்ள நிலையில்,  மேலும் சில தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

தற்போது பயன்பாட்டில் உள்ள மூன்று தடுப்பூசிகளை தவிர விரைவில் பயன்பாட்டிற்கு வரும் மற்ற தடுப்பூசிகளில் ஒன்று தான் கோர்பேவாக்ஸ் (Corbevax) ஆகும். இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயாலஜிகல்-இ (Biological-E) நிறுவனம் தயாரிக்கிறது. சுமார் 30 கோடி Corbevax தடுப்பூசிகளை வாங்க, மத்திய அரசு  ரூ.1,500 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு தயாரிப்பான இந்த பயாலஜிகல்-இ (Biological-E) தடுப்பூசியான கோர்பேவாக்ஸ் (Corbevax ) 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருக்கும் என மத்திய அரசின் கொரோனா செயற்குழு  தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

ALSO READ | DRDO 2-DG மருந்து அனைத்து கொரோனா திரிபுகளிலும் செயலாற்றுகிறது: ஆய்வு

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் முக்கிய மைல்கல்லாக இது இருக்கும் என கூறினார்.  மேலும் இந்த தடுப்பூசி மிக குறைவான விலையில் கிடைக்கும். இதன் விலை இரு டோஸ்களுக்கு ரூ.250 ஆக இருக்கும் என கூறப்படுகிறது

மேலும், வரும் அக்டோபர் மாத வாக்கில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. கோர்பேவாக்ஸ் வைரஸின்,  SARS-CoV-2 என்னும் வைரஸின் ஒரு குறிப்பிட்ட பகுதியான ஸ்பைக் புரதத்தினால் (Spike protein)  உருவாக்கப்பட்ட தடுப்பூசியாகும். ஒரு குறிப்பிட்ட பகுதியால் ஆனது. ஸ்பைக் புரதத்தை  உடலுக்குள் செலுத்தும் போது, வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும்.நோவாவாக்ஸ் (Novovax) என்னும் ஒரு புரத அடிப்படையிலான தடுப்பூசியையும் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ | இந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள பிற தடுப்பூசி விபரங்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News