நார்சத்து மிக்க உணவை அதிகமாக உட்கொள்வது நல்லது. நீண்ட நேரம் பசி எடுக்காது. சோர்வும் ஏற்படாது. இது உங்கள் உடலுக்கு சிறந்தது.
இது பலருக்கு எளிதான மற்றும் பிடித்தமான உணவாக இருந்தாலும், பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என ஒரே டயட்டை தொடர்ந்து கடைப்பிடித்தாலும் சோர்வாக இருக்கும். அது உடல் எடையை குறைக்க உதவாது. சில புதிய உணவுகளை அளவாக சேர்க்கவும். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களில் இருந்தும் சற்று தள்ளி இருக்கவும்.
உங்களுக்காக ஒரு சீரான உணவைத் தயாரிக்க புரதங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். எடையை குறைக்கும் போது புரதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வீட்டில் விரைவாக உடல் எடையை குறைப்பதற்கான நிரூபிக்கப்பட்ட வழிகளில் ஒன்று நாள் முழுவதும் சீரான இடைவெளியில் உணவை உட்கொள்வது. இது கலோரிகளை விரைவாக எரிக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் சர்க்கரை அளவு பற்றி கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் கூடுதல் சர்க்கரை உள்ளது. இது எடை அதிகரிக்கும் எச்சரிக்கை.
தினமும் காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை மற்றும் தேன் அடங்கிய ஒரு கப் வெந்நீரை குடிப்பது, உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் பயனுள்ள குறிப்புகளில் ஒன்றாகும்.
தூக்கம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. குறைந்த தூக்கம் உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கிறது. ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணிநேரம் தூங்க வேண்டும்.
ஆரோக்கியமாக இருக்க ஜிம்மிற்குதான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வாக்கிங், ஜாகிங் மற்றும் ரன்னிங் போன்ற குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சியை செய்வது படிப்படியாக உடல் எடையை குறைக்க உதவும்.
உடற்பயிற்சிகளைப் போலவே, அதிகாலையில் யோகா செய்வது உடல் எடையை குறைக்க உதவும்.