மூளை என்பது உடலின் அனைத்து பாகங்களையும் கட்டுப்படுத்தும் மிக முக்கியமான உறுப்பு. எனவே, மூளை ஆரோக்கியத்தில் (Brain) சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
உடற்பயிற்சி செய்யாமல் சோம்பலாக இருப்பது மூளையை மந்தமாக்கும். உடற்பயிற்சி அறிவாற்றல் செயல்பாடு, நினைவகம் மற்றும் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.
அதிக சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவது மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
தூக்கமின்மை காரணமாக நினைவாற்றல் குறைபாடுகள், கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மூளை ஆரோக்கியமாக இருக்க, குறைந்தது 7-8 மணிநேர தூக்கம் அவசியம்.
மன அழுத்தம் நினைவாற்றல் இழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க தியானம் செய்வது முக்கியம்.
ஃபோன், டேப்லெட் அல்லது கம்ப்யூட்டரில் அதிக நேரம் செலவிடுவது நேரடியாக மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது