தற்போது பல பெண்களுக்கும் கருப்பையில் கட்டி உருவாகும் பிரச்சனை இருந்து வருகிறது.
இதனை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டு சரி செய்ய விட்டால் பின்னால் பெரிய பிரச்சினையாக மாறிவிடும்.
கருப்பையில் நீர்கட்டி இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது சிரமம் மற்றும் எரிச்சல் ஏற்படும்.
மலம் கழிக்கும் போது பிரச்சனை ஏற்பட்டாலும் சாதாரணமாக எடுத்து விடக்கூடாது.
மாதவிடாயில் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவோம்.
அடிக்கடி அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் கருப்பையில் நீர்கட்டி இருப்பதற்கான அறிகுறி ஆகும்.
சம்பந்தமே இல்லாமல் வாந்தி மற்றும் பதற்றம் ஏற்பட்டால் நீர் கட்டியின் அறிகுறியாக இருக்கலாம்.
திடீரென்று உடல் எடை அதிகரித்தாலும் கருப்பையில் நீர்கட்டி இருப்பதற்கான அறிகுறிதான்.
மேலும் இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் அதிக வலி இருந்தால் அலட்சிய படுத்த வேண்டாம்.