வெள்ளை தேநீர் (White Tea) என்பது தேயிலை செடியின் மொட்டுகள், இலைகள் முழுவதும் விரிவதற்கு முன்பு பறிக்கப்பட்டு தயாரிக்கப்படும் டீ.
ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் பாலிபினால்கள் வெள்ளை தேநீரில் காணப்படுவதால், மூளைக்கு ஆற்றலை அள்ளி வழங்குகிறது.
வெள்ளை தேநீரில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் உயர் பிபி, சர்க்கரை நோய், மாரடைப்பு அபாயத்தை பெரிதும் குறைக்கிறது.
பசியை கட்டுப்படுத்தும் வெள்ளை தேநீர் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதம் எனலாம்.
முதுமை எதிர்ப்பு பண்புகள் கொண்ட வெள்ளை டீ, முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளை மறையச் செய்யும் தன்மை கொண்டது.
மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை நீக்கும் திறன் கொண்ட வெள்லை தேநீரை அஜீரண பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக அருந்த வேண்டும்.
ஆற்றல் அளவு நாள் முழுவது குறையாமல் இருக்கு காலையில் ஒயிட் டீ குடித்து வந்தால் போதும். இதனால், புத்துணர்ச்சி அடைவதோடு சோர்வு நீங்கும்.
ஒயிட் டீ என்னும் வெள்ளை தேநீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுநோயைத் தடுக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.