ஒரு மாதம் பால் குடிப்பதை நிறுத்தும் போது உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினசரி பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை சாப்பிடுகின்றனர்.
இருப்பினும் அதிகமாக பால் குடித்தால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு மாதம் முழுவதும் பால் குடிப்பதை நிறுத்தினால் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும்.
பால் புரதம் மற்றும் வைட்டமின்களின் ஆதாரமாக இருப்பதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
பால் குடிப்பதை நிறுத்தினால் கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும். பற்களை பராமரிக்க கால்சியம் அவசியம்.
பாலைத் தவிர்ப்பது செரிமான அசௌகரியத்தைக் குறைக்கும். இருப்பினும் அதனை சரி செய்யும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
குறிப்பிடத்தக்க உணவுமுறை மாற்றங்களைச் செய்வதற்கு முன் ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது.